மலரே என்னிடம் மயங்காதே – 15 – Malarae Ennidam Mayangathae 15

Support Us Link: – Click Here

For Audio: – Click Here

Audio: – 

Read: – Previous Part: – மலரே என்னிடம் மயங்காதே – 14

Next Part: – மலரே என்னிடம் மயங்காதே – 16

Sex Stories In Tamil – அந்த சம்பவத்துக்குப் பிறகு மலரும் சுத்தமாக மாறிப் போனாள். உணர்ச்சிகள் செத்துப் போன மரம் போலத்தான், மலர் நடந்து கொண்டாள். எந்திரம் போலத்தான் எல்லா வேலையுமே செய்தாள். ஏறெடுத்துக் கூட என்னை அவள் பார்ப்பது கிடையாது. ஏதாவது கேட்டாலும், எங்கேயோ வெறித்தபடி.. விட்டேத்தியாகத்தான் பதில் சொன்னாள். அடிக்கடி தனிமையில் சென்று அமர்ந்து கொண்டு, கண்ணீர் வடித்தாள். யாராவது வந்தால், அவசரமாக கண்களை துடைத்துக் கொண்டு எழுவாள்.

மலருடைய இந்த சோகம், என் மனதை வேதனையில் புரட்டி வாட்டியது. தனிமையில் அமர்ந்து யோசித்தபோது.. ஒரு உண்மை தெளிவாக உறைத்தது..!! மலர் என் மனதுக்குள் எப்போதோ வந்து விட்டாள்..!!!!! கயல் மட்டுமே வந்து கொண்டிருந்த கனவில், அப்புறம் ஏன் மலரும் வர ஆரம்பித்தாள்..?? அவளிடம் தாய்மையை உணர்ந்தபோது என் மனம் ஏன் பூரிக்க வேண்டும்..?? உள்ளத்தில் காதலில்லாமலா அன்று அவளை உரிமையாக என் மடியில் கிடத்தி முத்தமிட்டேன்..?? இப்போது அவள் முகத்தை திருப்பிக் கொண்டு செல்லும்போது.. அவள் என்னை பார்க்க மாட்டாளா.. எப்போதும் போல் என்னுடன் பேசமாட்டாளா.. என என் மனம் ஏன் ஏங்கித் தவிக்கிறது..??

ஆம்.. உண்மைதான்..!! மலரை நான் காதலிக்க ஆரம்பித்து விட்டேன் என்று தோன்றியது..!! ஆனால் அந்த காதலுக்காக என்னால் அகமகிழ்ந்து போக முடியவில்லை..!! ‘இந்த ஜென்மத்தில் கயலுக்கு மட்டுந்தான் என் இதயத்தில் இடம்’ என்று இத்தனை நாளாய் உறுதியாக இருந்த என் மனம், இப்போது வெட்கமில்லாமல் மலரையும் நினைக்கிறதே என்று கடிந்துகொள்ளத்தான் முடிந்தது..!! ‘மலருடன் சென்று பேசு’ என ஒரு நினைவு உந்தித்தள்ளும்.. ‘கயல் என்பவள் என்னாயிற்று..?’ என்று இன்னொரு நினைவு கேள்வி கேட்டு தடுத்து நிறுத்தும்..!!

இந்தமாதிரி ஒரு குழப்பமான போராட்டம்தான் என் மனதுக்குள் எந்த நேரமும்..!! மலர் தனிமையில் அமர்ந்து அழுவதை பார்க்கையில்.. ஓடிச்சென்று அவளை அணைத்துக் கொள்ளவேண்டும் போலிருக்கும்..!! நான் ஓட எத்தனிக்கையில்.. கயல் இந்தப்பக்கம் என் கையைப் பற்றி இழுப்பாள்.. தடுப்பாள்..!! கால்கள் செயலிழந்து போய் நான் பரிதாபமாய் நிற்க.. கயல் என்னைப் பார்த்து கைகொட்டி சிரிப்பாள்..!!

இந்த மாதிரிதான் ஒரு குழப்பத்துக்கு நான் உள்ளாகியிருந்தேன். மலரை வெறுத்து ஒதுக்கவும் முடியவில்லை. விரும்பி ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை..!! இரண்டுவித மனநிலைகளுக்குள் சிக்கி.. நான் சின்னாபின்னாமாகிக் கொண்டிருந்தேன்..!! அப்போதுதான்..

ஒருநாள் சனிக்கிழமை இரவு.. நானும், பன்னீரும் மொட்டை மாடியில் மது அருந்திக் கொண்டிருந்தோம். மலருடைய நடவடிக்கைகள் பன்னீருக்கும் பலத்த சந்தேகத்தை வரவழைத்திருந்தது. அன்று குடிக்கும்போது, என்னிடமே வாய்விட்டு கேட்டுவிட்டார்.

“உனக்கும் அவளுக்கும் ஏதாவது பிரச்னையா..?”

“பி..பிரச்னையா..? அ..அதுலாம் ஒன்னுல்லையே..?”

“ம்க்கும்.. இருந்தாலும் சொல்ல மாட்டீங்களே ரெண்டு பேரும்..!! நீயும் ஒன்னும் சொல்ல மாட்ட.. அவளும் வாயை தெறக்க மாட்டா..!! எப்படியோ போங்க.. என்னவோ நடக்குதுன்னு மட்டும் தெரியுது.. என்னன்னுதான் புரியலை..!!”

“ப்ச்.. அதுலாம் ஒன்னும் இல்ல பன்னீர்..!! நீ சோடாவை ஊத்து..!!”

நான் பேச்சை மாற்றினேன். பன்னீரும் சலிப்புடன் தலையாட்டிவிட்டு சோடாவை விஸ்கியில் ஊற்றி மிக்ஸ் செய்தார். வேறு விஷயங்களை பற்றி பேசியவாறு, பொறுமையாக குடித்தோம். வழக்கம் போல மூன்று ரவுண்டு முடிந்ததும், பன்னீர் எழுந்தார். நான் வரவில்லை என்றேன். அவர் எரிச்சலாக கேட்டார்.

“ஏன்.. என்னாச்சு இப்போ உனக்கு..?”

“எனக்கு கயல் நெனைப்பாவே இருக்கு பன்னீர்.. நான் இன்னும் ரெண்டு ரவுண்டு போட்டுட்டு வர்றேன்.. நீ போய் தூங்கு..”

அவர் கொஞ்ச நேரம் என்னையே எரிச்சலாக பார்த்தார். அப்புறம் ‘எப்படியும் போ’ என்று சொல்லிவிட்டு கிளம்பினார். அவர் சென்றதும் நான் மட்டும் தனியாக அமர்ந்து மதுவருந்தினேன். மேலும் மூன்று ரவுண்டுகள் உள்ளே செல்ல, உச்சபட்ச போதை இப்போது என் உச்சந்தலை வரை ஏறியிருந்தது. தலை ‘கிர்ர்ர்ர்..’ என்று சுழலுவது மாதிரி இருந்தது. எழுந்து செல்லக் கூட தோன்றாமல்.. சிகரெட் பற்றவைத்து புகை விட்டவாறு.. மேலே இருந்த வெண்மதியை.. 45 டிக்ரி கோணத்தில் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அப்போதுதான் மலர் மாடியேறி மேலே வந்தாள்.

“போதும்த்தான்.. எழுந்து வாங்க.. டைமாச்சு..!!”

நான் கொஞ்ச நேரம் மலரையே அமைதியாக பார்த்தேன். எவ்வளவு அழகாக இருக்கிறாள் இவள்..?? மேலிருக்கும் நிலவை விட இவள் எவ்வளவு அழகு..?? மற்ற பெண்களுக்கு பொறாமையை தூண்டி விடும்படியான அழகு..?? அழகு மட்டுமா..?? எவ்வளவு காதல் வைத்திருக்கிறாள் என் மீது..?? ‘எவளுமே என் அளவுக்கு உன்னை காதலிக்க முடியாது’ என என்னையே உணர வைக்கிற அளவுக்கு..??

“என்னத்தான்.. அப்படியே பாக்குறீங்க..? டைமாச்சு.. வாங்க.. வந்து சாப்பிட்டு படுங்க..!!”

TAMIL AUDIO SEX STORIES

நான் இத்தனை நாள் அவளுடன் பேச வேண்டும் என்று நினைப்பேன். ஆனால்.. ஏதோ ஒரு தயக்கம் என்னை தடுத்துவிடும்..!! இன்று.. எனக்கு உள்ளே ஏறியிருந்த போதை, இப்போது ஒரு தைரியத்தை கொடுத்திருந்தது..!! சிகரெட்டை சுண்டி எறிந்து விட்டு, போதையில் வாய்குழற மலரிடம் சொன்னேன்.

“நா..நான் சாப்பிடுறது இருக்கட்டும்.. நீ வா.. இங்கவா.. இ..இங்க வந்து உக்காரு..!!”

“எ..எதுக்கு..?”

“உன்கிட்ட கொ..கொஞ்சம் பேசணும்..”

“எதுவா இருந்தாலும்.. காலைல பேசிக்கலாம்த்தான்.. இப்போ வாங்க..”

“இல்ல மலர்.. காலைல எனக்கு இந்த தைரியம் இருக்காது..!! ப்ளீஸ் மலர்.. உக்காரு..!!”

நான் கெஞ்சலாக சொல்லவும், மலர் தயங்கி தயங்கி எனக்கு எதிரே கிடந்த சேரில் அமர்ந்தாள். என்ன சொல்லப் போகிறேன் என்று குழப்பமாக என்னை ஏறிட்டாள். நான் அவளுடைய முகத்தையே கொஞ்ச நேரம் அமைதியாக பார்த்துவிட்டு, அப்புறம் சற்றே பரிதாபமான குரலில் கேட்டேன்.

“நா..நான் எங்கயாவது போயிடட்டுமா மலர்..?” அப்படி நான் கேட்டதும் மலர் அதிர்ந்து போனாள்.

“அ..அத்தான்.. என்ன சொல்றீங்க நீங்க..?”

“சொல்லு மலர்.. நா..நார்த் இந்தியால கூட எங்க கம்பெனி ப்ராஞ் இருக்கு.. ட்ரான்ஸ்ஃபர் கேட்டா கிடைக்கும்.. நான் போயிடவா..?”

“ஐயோ.. ஏன்-த்தான் இப்படிலாம் பேசுறீங்க..?”

“இ..இல்ல மலர்.. நான் இங்க இருக்குறது சரியில்ல.. இங்க இருக்குறது சரியில்ல..” புலம்பினேன்.

“என்ன சரியில்ல..? என்னாச்சு இப்போ..?”

“நா..நான்..” சொல்ல தயங்கினேன்.

“நீங்க..??”

“ம்ஹூம்.. நான் சொல்ல மாட்டேன்..”

“ஐயோ.. சொல்லுங்கத்தான்.. ப்ளீஸ்..!! நீங்க..??”

“எ..எனக்கு பயமா இருக்கு மலர்..”

“நீங்க சொல்றது எனக்கு ஒன்னும் புரியலை..!! என்ன பயமா இருக்கு உங்களுக்கு..??”

“நா..நான் இங்க இருந்தேன்னா..”

“ம்ம்ம்..?”

“எ..என்னைக்காவது ஒருநாள்.. உன்னை ஓடி வந்து அணைச்சுக்கிட்டு.. ‘ஓ’ன்னு அழுதிடுவேன் மலர்..!! அது நடக்க கூடாது.. நடக்கவே கூடாது..!!”

இப்போது நான் உடைந்து போய் அழ ஆரம்பித்தேன். என் கண்களில் தாரை தாரையாய் நீர் வடிய, மலர் திகைத்துப் போனாள். என் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை நம்ப முடியாமல், என்னையே அதிர்ச்சியாக பார்த்தாள்.

“அ..அத்தான்..” திணறலாக சொன்னாள்.

“நீ என் மனசுக்குள்ள வந்துட்ட மலர்.. நான் எவ்வளவோ தடுக்க நெனச்சும்.. எல்லாத்தையும் உடைச்சுக்கிட்டு உள்ள வந்துட்ட..!! இனிமே நான் இங்க இருக்குறது நல்லது இல்ல..!! என் கயலுக்கு நான் துரோகம் பண்றேன்னு என் மனசாட்சி என்னை குத்தி கிழிக்குது மலர்..!!”

“ம்ம்ம்ம்..” இப்போது மலரும் அழ ஆரம்பித்திருந்தாள். உதடுகளை கடித்து அந்த அழுகையை அடக்க முயன்றவாறு சொன்னாள்.

“நான் நெறைய தப்பு பண்ணிட்டேன் மலர்.. அன்னைக்கு கனவுல கயலை பாத்து.. நானே என் கண்ட்ரோல்ல இல்லாம உன்னை கிஸ் பண்ணி..”

“அது உங்க தப்பு இல்லைத்தான்.. நான்தான் அதை இனிஷியேட் பண்ணேன்..”

“அப்புறம் நான் பண்ணின தப்பை நெனச்சு.. ஒவ்வொரு நாளும்.. என்னை நானே வெறுத்து.. எனக்கு என் மேல இருந்த கோவத்தை.. அன்னைக்கு உன் மேல காட்டிட்டேன்.. என்னை மன்னிச்சுடு மலர்.. என்னை மன்னிச்சுடு..!!”

“ஐயோ.. என்னத்தான் நீங்க..? நீங்க எந்த தப்பும் பண்ணலை.. நான்தான் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்..” மலர் இப்போது பெரிய குரலில் அழ ஆரம்பித்தாள்.

“நான் கயலுக்கு சத்தியம் பண்ணி தந்திருக்கேன் மலர்.. இன்னொரு பொண்ணுக்கு என் மனசுல எடம் இல்லைன்னு..!! ஆ..ஆனா.. ஆனா.. உன்னால அவளுக்கு இப்போ துரோகம் பண்ண ஆரம்பிச்சுட்டேன்..!!”

“ப்ளீஸ்த்தான்.. அழாதீங்க..!! ப்ளீஸ்..!!” மலர் கெஞ்சலாக கத்தினாள்.

“எ..என்னால.. என்னால இந்த வேதனையை தாங்க முடியலை மலர்..!! நீயும், கயலும் ஆளுக்கொரு பக்கம் நின்னு.. என்னை புடிச்சு இழுத்து.. பிச்சு பிச்சு எடுத்து.. பீஸ்பீஸா என்னை கிழிக்கிற மாதிரி இருக்கு மலர்..!! என்னால இதை தாங்க முடியலை.. இந்த சித்திரவதையை என்னால தாங்க முடியலை மலர்..!! நான் எங்கயாவது கண்காணாத எடத்துக்கு போயிர்றேன் மலர்..!! ப்ளீஸ்.. எங்கயாவது போயிர்றேன்”

நான் அழுது புலம்பி வெடித்து சிதற, மலர் நீர் கோத்துக்கொண்ட கண்களுடன்.. படபடக்கும் உதடுகளுடன்.. என்னையே பரிதாபமாக பார்த்துக்கொண்டு.. ஸ்தம்பித்துப்போய் அமர்ந்திருந்தாள்..!!

மனதில் இருப்பதை வெளிப்படையாய் சொல்லவே ஒரு மாபெரும் தைரியம் தேவை. உணர்சிகளை கக்க தெரியாத இதயமே, உச்சபட்ச அழுத்தத்தில் சிக்கும். என் மனதில் உள்ளவற்றை மலரிடம் துணிச்சலாக சொல்லிவிட்டேன். அது அவளுக்கு எந்த மாதிரி உணர்வை கொடுத்திருக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால் என் மனதை திறந்து காட்டியதில், நான் மிகவும் நிம்மதியாக உணர்ந்தேன். ‘என் மனதில் என்ன இருக்கிறது என்பதை இப்போது அவளும் அறிவாள்’ என்ற எண்ணமே, எனக்குள் ஒரு அமைதியை ஏற்படுத்தியிருந்தது.

TAMIL AUDIO SEX STORIES

என் மனதில் இருந்ததை தெரிந்து கொண்டது, மலருக்கும் ஒருவகையில் நிம்மதியாகவே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்த நாள் காலையில் அவளை பார்த்தபோது, அவளுடைய முகம் பளிச்சென தெளிவாக இருந்தது. கடந்த சில நாட்களாக அவள் முகத்தில் குடியிருந்த சோகம், இப்போது காணாமல் போயிருந்தது. என்னைப் பார்த்ததும் அழகாக, இதமாக புன்னகைத்தாள். அவளுடைய பேச்சிலும் அத்தனை நாட்கள் இருந்த இறுக்கம் குறைந்து, இப்போது இயல்புக்கு வந்திருந்தது.

“நல்ல தூக்கம் போல..? எட்டு மணி போல வந்து பாத்தேன்.. அடிச்சு போட்ட மாதிரி தூங்கிட்டு இருந்தீங்க.. சத்தம் கொடுத்து பாக்கலாமான்னு நெனச்சேன்.. அப்புறம் வேணாம்னு விட்டுட்டேன்..” அபிக்கு டயாப்பர் மாட்டிவிட்டுக்கொண்டே, மலர் சொன்னாள்.

“நைட்டு.. கொ..கொஞ்சம் ஓவர் ஆயிடுச்சு..”

“ம்ம்.. நீங்க பேசுனதிலேயே தெரிஞ்சது..”

மலர் இப்போது அபிக்கு ஜட்டி மாட்டி விட்டு, அவனை தன் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டாள். கிண்ணத்தில் கலந்து வைத்திருந்த செரிலாக்கை ஸ்பூனில் அள்ளி, அபியின் வாயருகே நீட்டினாள். அவனும் அழகாக அதை தன் பொக்கை வாய் திறந்து வாங்கிக் கொண்டான். நான் அவர்கள் இருவரையுமே கொஞ்ச நேரம் அமைதியாக பார்த்துவிட்டு, அப்புறம் சற்றே தயக்கமான குரலில் அவளிடம் சொன்னேன்.

“ஆ..ஆனா.. நான் பேசுனதுலாம் ஏதோ குடிச்சிட்டு உளர்னதுனு நெனச்சிடாத மலர்.. எல்லாம் என் மனசுல இருந்த ஃபீலிங்க்ஸ்.. எதுவுமே பொய் இல்ல.. எல்லாமே உண்மை..!!”

“ம்ம்ம்.. தெரியும்..!!” அவள் அபிக்கு உணவு ஊட்டுவதிலேயே கவனமாக சொன்னாள்.

“என்னை புரிஞ்சுக்கிட்டேல..?” நான் அப்படி கேட்டதும், இப்போது மலர் நிமிர்ந்து என்னை கூர்மையாக பார்த்தாள்.

“ம்ம்.. நல்லா புரிஞ்சுக்கிட்டேன்..” என்றால் தெளிவான குரலில்.

“எ..என் மேல எதுவும் கோவமா..?”

“சேச்சே.. அதெல்லாம் ஒண்ணுல்ல..!! உங்க மனசுல உள்ளதை வெளிப்படையா சொன்னதுல.. எனக்கு சந்தோஷந்தான்..!!”

“வேற..” நான் சற்றே இழுக்க,

“ம்ம்ம்..??” அவள் புருவத்தை சுருக்கினாள்.

“வேற எதுவும் எங்கிட்ட கேக்கணுமா..?”

“இல்ல.. ஒண்ணுல்ல..!!”

அவ்வளவுதான்..!! அப்புறம் நானும் மலரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மலர் என் மனநிலைமையை நன்றாக புரிந்து கொண்டாள் என்று தோன்றியது. எங்களுடைய பிரிவுதான் என் மனநிம்மதிக்கு ஒரே வழி என்பதை, அவளும் ஏற்றுக் கொண்டாள் என்று நினைத்தேன். இனி காலம் கடத்தாமல், உடனடியாய் அதற்கான முயற்சியில் இறங்கவேண்டும் என்று முடிவு செய்தேன்.

அடுத்த நாள் நான் ஆபீஸ் சென்றதுமே, முதல் வேலையாக எங்கள் டைரெக்டரை சென்று சந்தித்தேன். எனக்கு வட இந்தியா பக்கம் ட்ரான்ஸ்ஃபர் வேண்டும் என்று கேட்டேன். அவர் என்னை நம்ப முடியாமல் பார்த்தார். ‘என்னாச்சு உனக்கு..?’ ‘லேபர்ஸோட ஏதும் பிரச்னையா..?’ ‘நார்த் சைட்ல லேபர் ப்ராப்ளம் இன்னும் ஜாஸ்தியா இருக்குமே..? சமாளிச்சுடுவியா..?’ ‘ரொட்டியே உனக்கு பிடிக்காதுன்னு சொல்லுவ..?” என்று எண்ணற்ற கேள்விகள் கேட்டு, என்னை எரிச்சலடைய வைத்தார். எல்லாவற்றிற்குமே நான் மழுப்பலாகவே பதில் சொல்ல, அவர் ஒருகட்டத்தில் சோர்ந்து போனார். இறுதியாக ஒரு நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்தியவர், சலிப்பான குரலில் சொன்னார்.

“ஆல்ரைட்.. எனக்கு ஒரு டூ வீக்ஸ் டைம் கொடு அசோக்.. நான் ஃபீசிபிலிட்டி பாத்துட்டு சொல்றேன்..”

“தேங்க்ஸ் ஸார்..”

நானும் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் சொன்னேன். அவருடைய அறையை விட்டு வெளியே வந்தபோது, மனதில் சின்னதாய் ஒரு குழப்பம் முளைத்திருந்தது. ட்ரான்ஸ்ஃபர் எளிதில் கிடைத்து விடும் என்றுதான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் டைரெக்டர் என் மீது இவ்வளவு பாசக்காரராக இருப்பார் என்று எண்ணியிருக்கவில்லை. விடக்கூடாது..!! திரும்ப திரும்ப வந்து.. இவரை இம்சை செய்தாவது, இடமாற்றம் வாங்கியாக வேண்டும்..!!

ஆனால்.. எனக்கு இம்சை வேறு ரூபத்தில் வருமென்று அப்போது எனக்கு தெரியவில்லை. அதற்கு அடுத்த நாள் மதியமே, பன்னீர் என் அறைக்குள் பயங்கர கோபத்துடன் நுழைந்தார். நுழைந்ததுமே கதவை அறைந்து சாத்தியவர், குரலை உயர்த்தி என்னைப் பார்த்து கத்தினார்.

“உன் மனசுல என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்குற நீ..?” Jatti Avukkum Sex Stories In Tamil

– தொடரும்

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *